தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு
1 min read
Balakrishnan takes charge as the trustee of the Tenkasi Kashi Vishwanath Temple
10.3.2025
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் அறங்காவலர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவில்
அறங்காவலராக வல்லம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் இலத்தூர்பகுதியைச் சேர்ந்த மூக்கன் பாவூர்சத்திரம்
செட்டியூரை சேர்ந்த முருகேசன் தென்காசி ஷீலா குமார் சுரண்டை புவிதா ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினர்களாகஉதவி ஆணையர் சங்கம் காசி விஸ்வநாதர் கோவில் செயல் அலுவலர் பொன்னி முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூடுதல் செயலாளர் ஆர் கே காளிதாஸ், தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், தென்காசி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் பரமசிவன் மாவட்ட செயலாளர் சந்திரமதி என்ற ராஜா, கவிதா மாரியப்பன், வழக்கறிஞர்கள் காளியப்பன், பன்னீர்செல்வம், சுரேஷ், பிரபாகரன், குற்றாலம் வர்த்தக சங்கத் தலைவர் காவையா, ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், இலஞ்சி பேரூர் செயலாளர் முத்தையா, பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.