தேசிய கல்வியை ஒருநாளும் ஏற்கமாட்டோம் : மு.க.ஸ்டாலின் உறுதி
1 min read
BJP’s hatred towards Tamils has been exposed: Chief Minister M.K. Stalin
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
2024-இல் மத்திய பா.ஜ.க. மந்திரி ஷோபா: “தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!”
2025-இல் மத்திய பா.ஜ.க. மந்திரி தர்மேந்திர பிரதான்: “தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!”
இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், பேசியபோது தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது.
“இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இவர்கள் கொண்டு வரும் தேசிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் ஏற்காது. நம் உரிமைக்கான போர்க்குரலைத் தமிழ்நாடு தொடர்ந்து எழுப்பும்” எனச் செங்கல்பட்டு அரசு விழாவில் ஆணித்தரமாகத் தெரிவித்தேன்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.