இந்திய ரெயில்வேயில் அதிகரிக்கும் பெண் ஊழியர்கள்
1 min read
Number of women employees in Indian Railways increases to 8.2 percent
11.2.2025
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ரெயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.13 லட்சத்தை தாண்டியுள்ளது. இது மொத்த பணியாளர்களில் 8.2 சதவீதமாகும். இது 2014-ல் 6.6 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய ரெயில்வேயின் முக்கிய செயல்பாட்டு வேலைகளில் பெண்கள் அதிக பங்கு வகிக்கின்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தற்போது 2,162 பெண்கள் லோகோ பைலட்டுகளாக பணிபுரிகின்றனர். அதே நேரத்தில் 794 பெண்கள் ரெயில் மேலாளர்களாக (காவலர்கள்) உள்ளனர். கூடுதலாக, இந்தியா முழுவதும் 1,699 பெண்கள் நிலைய மேலாளர்களாக (காவலர்கள்) உள்ளனர். கூடுதலாக, இந்தியா முழுவதும் 1,699 பெண்கள் நிலைய மேலாளர்களாக (station masters) பணிபுரிகின்றனர்.
இந்திய ரெயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பெண் லோகோ பைலட்டுகள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 1.13 லட்சத்தை தாண்டியுள்ளது. இது மொத்த பணியாளர்களில் 8.2 சதவீதமாகும். இது 2014-ல் 6.6 சதவீதத்திலிருந்து அதிகரித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ரெயில்வே மூத்த அதிகாரி கூறியதாவது:-
நிர்வாக மற்றும் பராமரிப்புத் துறைகளிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். இந்திய ரெயில்வேயில் 12,362 பெண் அலுவலக ஊழியர்களும் 2,360 பெண் மேற்பார்வையாளர்களும் உள்ளனர்.
பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையான தண்டவாளப் பராமரிப்பில், ரெயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதற்காக 7,756 பெண்கள் இப்போது பணியாற்றி வருகின்றனர்.
பயணிகள் சேவைகளிலும் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 4,446 பேர் டிக்கெட் சரிபார்ப்பாளர்களாகவும், 4,430 பேர் நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பாயிண்ட்ஸ்மேன்களாகவும் பணியாற்றுகின்றனர்.
இந்திய ரெயில்வே பல ரெயில் நிலையங்களை அனைத்து பெண் குழுக்களுடன் செயல்படுத்தி உள்ளது. இவற்றில் மாதுங்கா, நியூ அமராவதி, அஜ்னி மற்றும் காந்திநகர் ரெயில் நிலையங்கள் அடங்கும்.
இந்திய ரெயில்வேயில் 12.3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிகின்றனர். மேலும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்திய ரெயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.