பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது
1 min read
8 people arrested for using injecting drugs in Pollachi
12/4/2025
கோவை மாவட்டம் பொள்ளாச்சி போலீசாருக்கு மீன்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அதிரடியாக சோதனை மேற்கொண்ட போலீசார் சிலரிடம் போதை ஊசிகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் இமா மணி, சேக்பரி, சலீம், நந்தகுமார், பாபா இப்ராஹிம், முஸ்தபா, முகமது அலி, ரத்னகுமார் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்லடம் பகுதியை சேர்ந்த முரளி குமார் என்பவரிடம் போதை மருந்து நிரப்பப்பட்ட குப்பிகளை வாங்கியது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.