எலான் மஸ்கின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த ஏர்டெல் -விரைவில் ஸ்டார்லிங்க் இணைய சேவை
1 min read
Airtel signs deal with Elon Musk’s company – Starlink internet service coming soon
12.3.2025
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க், ‘ஸ்பேஸ்எக்ஸ்’ என்ற தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணையச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்தியாவிலும் சேவையாற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தது. ஆனால் மத்திய அரசு விதித்த டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை ஸ்பேஸ்எக்ஸ் ஏற்காமல் இருந்தது. இதற்கிடையே கடந்த மாதம் விதிகளுக்கு உட்பட்டு ஸ்பேஸ்எக்ஸ் கையெழுத்திட்டு உரிமத்தை விரைவில் பெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்டார்லிங்குடன் இணைந்து அதிவேக இணைய சேவைகளை இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் வழங்க உள்ளது. இதற்காக ஏர்டெல்லின் சில்லறை விற்பனைக் கடைகளில் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இந்தியாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் சேவை வழங்க ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மற்றும் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் இணைப்புக்கான எங்கள் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது” என்று ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், துணைத் தலைவருமான கோபால் விட்டல் கூறியுள்ளார்.