பண்பொழி திருமலைகோவில் அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்பு
1 min read
Arunachalam takes charge as the chairman of the Panpozhi Tirumalaikovil Board of Trustees
12.3.2025
தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலை குமாரசாமி கோயிலுக்கு புதிய அறங்காவலர்களாக கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அருணாசலம் பண்பொழி இசக்கி, வடகரை பாப்பா, சாம்பவர் வடகரை சுமதி , அழகப்பபுரம் வே.கணேசன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து சமய அறநிலைத்
துறையால் நியமனம் செய்யப்பட்டனர்
அதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும் நேற்று பதவியேற்று உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.
அதன் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் தேர்வு கோவில் உதவி ஆணையர் கோமதி ஆய்வாளர் சேதுராம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது
பண்பொழி திருமலைக் குமாரசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்று கொண்டார்.
அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அருணாசலத்திற்கு
அரங்காவலர் குழு உறுப்பினர்கள்
பண்பொழி இசக்கி, வடகரை பாப்பா, சாம்பவர் வடகரை சுமதி , அழகப்பபுரம் வே.கணேசன்கோவில் உதவி ஆணையர் கோமதி ஆய்வாளர் சேதுராம், கோவில் பணியாளர்கள், ராஜா கன்ஸ்ட்ரக்சன் ரவிச்சந்திரன் என்ற ரவி ராஜா தொழிலதிபர்கள்
வர்த்தகர்கள் முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான மா. செல்லத்துரை மாவட்ட திமுக அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம், கிட்டுப்பிள்ளை அரசு ஒப்பந்ததாரர் பால சுப்பிரமணியன் என்ற கண்ணன் முத்துக்குமாரவேல் அரசியல் கட்சி பிரமுகர்கள் தென்காசி கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பக்தர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். முடிவில் அருண் காவலர் குழு தலைவர் அருணாசலம் அனைவருக்கும் நன்றி கூறினார்.