பாண்டிச்சேரியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை
1 min read
Rs. 1,000 monthly incentive for students pursuing higher education in Pondicherry
12.3.2025
புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதல்-அமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார். அவர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-
விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.
அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை, இனி தினந்தோறும் வழங்கப்படும்.
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
புதுச்சேரி மத்திய சிறைச்சாலை முழுமையாக கணினி மயமாக்கப்படும்.
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயத்தப்படும்.
மீனவ சமுதாய ஈமச்சடங்குகளுக்கான நிதி ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.
மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகு 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.