இது எனக்குதான்: தனது நாற்காலியுடன் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறிய ட்ரூடோ
1 min read
This is for me: Trudeau walks out of Parliament with his chair
12.3.2025
வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை பிரதமராக ட்ரூடோ தொடருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும், கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் அவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ நேற்று சந்தித்தார். இருவரும் சில மணி நேரம் ஆலோனை நடத்தினர்.
தனது பதவிக்காலம் முடிவடைவதால் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஜஸ்டின் ட்ரூடோ, பாராளுமன்றத்தில் இருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார்.
இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கனடாவில் எம்.பி.யாக இருந்தவர் பதவி விலகியதும் தான் அமர்ந்திருந்த நாற்காலியை கொண்டு செல்லலாம் என்பது நடைமுறை ஆகும்.