தமிழகத்தில் காமராஜர் பெயரில் நவோதயா பள்ளி; புளியங்குடியில் அண்ணாமலை உறுதி
1 min read
Navodaya School in the name of Kamaraj in Tamil Nadu; Annamalai confirmed in Puliyangudi
13.3.2025
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தலைமை தாங்கினார்.
பாஜக முன்னாள் நிர்வாகிகள் பாலகுருநாதன் அருள் செல்வம்,
ராமநாதன், பாலகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். புளியங்குடி நகர தலைவர் சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாலை, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
அண்ணாமலை பேசும்போது கூறியதாவது:-
தேசியவாதிகள் நிறைந்த தென்காசி மாவட்டத்தில் தற்போது கனிம கொள்ளை நடந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம், ஊழல் தலை விரித்து ஆடுகிறது. இந்த ஆட்சியால் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெரிய கேடு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும் தமிழ்மொழியின் பெருமையையும், கலாசாரத்தையும், சிறப்பையும் பேசி வருகிறார். தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் அதிக அளவில் அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கல்வித்தரம் மிகவும் அதல பாதாளத்தில் உள்ளது. ஆட்சியில் உள்ளவர்கள் குடும்பத்தினர் இந்தி கற்பிக்கின்ற பள்ளியில் படிக்கின்றனர். இந்தி கற்பிக்கும் பள்ளிகளை நடத்துகின்றனர். இந்த தி.மு.க. அரசு இந்தி மொழியை திணிப்பதாக பொய் பிரசாரம் செய்து மக்களை ஏமாற்றி வருகிறது.
மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையையும் ஏற்க மறுக்கின்றனர். கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அருமையான திட்டங்களை ஏற்க மறுக்கின்றனர். தமிழகத்தில் ஒரு நவோதயா பள்ளி கூட இயங்க வில்லை என்பது வேதனைக்குரியது. தமிழகத்தில் 2026-ம் ஆட்சி அமைக்கும் போது நவோதயா பள்ளிகள் மீண்டும் அமைக்கப்படும். வேண்டுமானால் காமராஜர் பெயரில் அந்த பள்ளிகளை செயல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக் குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும் பெண்களுக்கான உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்பி விட்டு பாஜக ஆட்சி தமிழகத்தில் அமையும் போது ரூபாய் 2500 மகளிருக்கான உரிமை தொகை வழங்கப்படும்.
புளியங்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது என்ப தையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.பி. தீனதயாளன், எஸ்.வி.அன்புராஜ்,
ஆர்.பாண்டித்துரை, எம் ராமராஜா, தென்காசி முத்துக்குமார், விவேகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்