July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி கோவில் 7-ந் தேதி கும்பாபிஷேகம்- யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது

1 min read

The Kumbabhishekam of Tenkasi Temple on the 7th – Yagasalai Mukhurtham was planted

13.3.2025
தென்காசி மாவட்டம், தென்காசியில் உள்ள காசிவிஸ்வநாத சுவாமி கோவிலில் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி நடைபெறும் மகா கும்பா பிஷேக விழாவை முன்னிட்டு நேற்று யாகசாலை முகூர்த்த கால் நடுதல் கால்கோள் விழா நடந்தது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அறங்காவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கடந்த 15ம் நூற்றாண்டில் தென்காசி பகுதியை ஆண்ட பராக்கிரமபாண் டிய மன்னரால் வடக்கே கங்கை கரையில் அமைந்துள்ள காசிவிசுவநாதர் தெற்கில் உள்ளவர்களும் தரிசிக்கும் வண்ணம் 11 அடுக்கு கோபுரங்களு டன் சிற்றாற்றின் கரையில் காசி விஸ்வநாதர் கோயில் கட்டப்பட்டது. இடைக்காலத்தில் கோபுரத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக சில அடுக் குகள் உடைந்து சேதம் அடைந்தது. 34 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோபுரம் புதுப்பிக்கப்பட்டு 9 அடுக்குகள் கொண்ட கோபுரமாக திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது திருப்பணிகள் நடைபெற்று 19 ஆண் டுகள் ஆகிவிட்ட நிலையில் கோவிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்த னர். இதனை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தென்காசி காசி விஸ்வ நாதர் கோயிலில் கும்பா பிஷேகம் நடத்த உத்தர விட்டார்.

இதனையடுத்து ராஜகோபுரத்தில் பழுத டைந்த சிற்பங்களை சீரமைத்தல், வர்ணம் பூசுதல், உலகம்மன் சன்னதி, முருகன் சன்னதி, சுவாமி சன்னதி, உள்ள விமானங்கள், கோயிலின் மேற்கூரை, தளஓடுகள் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றது. கோவில் உள்பிரகாரத்தில் சகஸ்ரலிங்கம், பராசக்தி பீடம், சொக்க நாதர் மீனாட்சி சன்னதி, காலபைரவர் சன்னதிகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவிலில் உள்ள சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதிகளில் உள்ள கொடிமரங்களை மாற்றுவதற்கு திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். இதனையடுத்து தென்காசி வர்த்தக சங்க முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான அழகர்ராஜா, ஸ்ரீராம் நிறுவனங்களின் அதிபர் சுரேஷ்ராஜா ஆகியோர் தங்களது சார்பில் புதிய கொடிமரத்தை உபயமாக வழங்குவதாக தெரிவித்தையடுத்து ஆகம விதிப்படி சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

இந்நிலையில் நேற்று காலையில் யாகசாலை முகூர்த்த கால் நடுதல் கால்கோள் விழா நடந்தது. முன்னதாக பூஜை களை தூத்துக்குடி சிவன்கோயில் செல்வம் பட்டர், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் செந்தில்பட்டர் தலைமையில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே‌.கமல்கிஷோர், அறங்காவலர் குழுத் தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், திருப் பணி கமிட்டி தலைவர்கள் வசந்தகுமார், வேங்கடரமணன், அழகர்ராஜா, உப தலைவர்கள் ஜெயபால், பாலசுப்பிரமணியன். செயலாளர் வைரமுத்து, இணைச் செயலாளர்கள் வெங்கடேஷ்ராஜா, வெங்கடேசன் ராஜா, முருகன்ராஜ், பொருளாளர் சங்கரன், உதவி பொருளாளர் பெரியநாயகம். கமிட்டி உறுப்பினர்கள் ராஜ்குமார், சந்திரன், பால சுப்ரமணியன், கிருஷ்ண மூர்த்தி, சுடலை மணி, ராஜன், ராஜாமணி,சுப்பி ரமணியன், தேவேந்திரன், கோயில் செயல் அலுவலர் பொன்னி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முருகேசன், ஷீலா குமார், மூக்கன், புவிதா, பிரவீன் பட்டேல், ராஜ சேகர், ஜெயபால், கீர்த்தி பட்டேல், ஜெயகுருசா மில் ஜெயபால், வேம் பார் சாமில் பிரபாகரன், குற்றாலம் வர்த்தக சங்கத் தலைவர் காவையா. தென்காசி வியாபாரிகள் நல சங்க தலைவர் பரமசிவன், செயலாளர் சந் திரமதி, ராஜாக்கண்ணு, கங்காதரன், மகேஷ், முருகன், காசிநாடார், ஆடிட் டர் நாராயணன் உட்பட அனைத்து சமுதாய பக்தர்கள், சிவனடியார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.