தமிழகத்தின் கடன் வரம்புக்குள்தான் உள்ளது – நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் பேட்டி
1 min read
Tamil Nadu’s debt is within the limit – Interview with Finance Secretary Udayachandran
14.3.2025
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதியில்லை. நிர்வாகத்திறமையற்ற அரசு நடக்கிறது என்பதே எதார்த்த உண்மை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்தநிலையில், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,000 கோடியாக குறையும். மாநில அரசின் கடன் வாங்கும் வரம்புக்குள்தான் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து பல திட்டங்களுக்கான நிதி வந்திருந்தால் இது மேலும் குறைந்திருக்கும். ஜிஎஸ்டியை பொறுத்தவரை டிஜிட்டல் சேவையில் கூடுதல் கவனம் செலுத்திவருகிறோம் என்றார்.