தொகுதி மறுவரையறை விவகாரம்: பாராளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு
1 min read
Constituency redelineation issue: DMK MPs walk out of Parliament
18.3.2025
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடந்து வருகிறது. பாராளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகாகும்பமேளா குறித்து பேசினார்.
இதனையடுத்து, மக்களவையில் பிரதமர் மோடி, முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார். ஆனால் இன்று பாராளுமன்றம் கூடியதும் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை.
மேல் சபையிலும் தொகுதி மறுவரையரை குறித்து விவாதிக்க அனுமதி வழங்கப்பட வில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் பாாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி. திருச்சி சிவா, “தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு கட்டாயம் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.