டெல்லியில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி பணம் பறிப்பு
1 min read
Extortion at gunpoint in broad daylight in Delhi
18.3.2025
“அங்காடியா” என்பது, வணிகர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய முறையாகும். பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும். பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் நபர்கள் அங்காடியாக்கள் ஆவர்.
இவ்வாறான ஒரு அங்காடியாவை டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ஒருவர் அங்காடியா வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தார்.
அந்த நபர் வர்த்தகரை பின்தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரது பையை எடுத்துக்கொண்டு ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் அங்கிருந்து செல்வதன்முன் பல முறை தனது துப்பாக்கியால் அந்த நபர் சுட்டார்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.