ஜோ பைடன் மகனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து
1 min read
Former President Joe Biden’s son’s security revoked
18.3.2025
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை
எடுத்து வருகிறார். பதவியேற்றதும் முன்னாள் அதிபர் ஜோ
பைடன் நிர்வாகத்தின் பல உத்தரவுகளை ரத்து செய்தார்.
இந்த நிலையில் ஜோ பைடனின் மகன் ஹண்டர், மகள்
ஆஷ்லே ஆகியோருக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை
பாதுகாப்பை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப்
அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, “ஹண்டர் பைடனுக்கு நீண்ட
காலமாக ரகசிய சேவை பாதுகாப்பு உள்ளது. இதற்கு
அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் செலுத்தியுள்ளனர்.
அவர் இந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது
பாதுகாப்புப் பிரிவில் 18 முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இது
அபத்தமானது.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ஹண்டர் பைடன்
இனி ரகசிய சேவை பாதுகாப்பைப் பெறமாட்டார். அதேபோல்
ஆஷ்லே பைடனுக்கு பாதுகாப்பு சேவை நீக்கப்படுகிறது “
என்றார்.