புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்
1 min read
Tamil is mandatory on the name boards of commercial establishments in Puducherry
18.3.2025
புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் தங்களது பெயர் பலகைகளில் தமிழ் பெயர் அதிகம் இல்லை. கட்டாயம் வைக்க வேண்டும் என உறுப்பினர் நேரு இன்று சட்டப்பேரவையில் பேசினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, “புதுச்சேரியில் உள்ள கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டியது கட்டாயம். நிச்சயமாக கடை வைத்திருக்கும் வியாபாரிகள் பெயர் பலகையில் தமிழில் பெயர் வைக்க வேண்டும். தமிழ் நமது உணர்வு. அரசு விழா அழைப்பிதழ்கள் தமிழில்தான் அச்சடிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.