ஆஸ்பத்திரிக்குச் சென்று மருத்து போட்ட குரங்கின் புத்திசாலித்தனம்
1 min read
The cleverness of the monkey who went to the hospital and got treatment
18.3.2025
சேட்டைக்கு பெயர்பெற்ற விலங்கு குரங்கு. அதன் செயல் கிட்டத்தட்ட மனிதனின் குணாதிசயங்களை ஒத்து இருக்கும். புத்திசாலி விலங்கு என குரங்கு கூறப்படுவதற்கு வங்காளதேசத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்குள்ள மெஹர்பூரில் குரங்குகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது.
இந்தநிலையில் குரங்கு ஒன்றுக்கு கையில் அடிபட்டது. அப்போது அந்த குரங்கு அங்குள்ள மருந்துக்கடைக்கு தானாக சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர், குரங்குக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்தார். அங்கு கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் குரங்குக்கு உதவி செய்ய முற்பட்டனர். அப்போது அதன் கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து தடவி முதலுதவி சிகிச்சை அளித்தனர். குரங்கும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.