தொகுதி மறுசீரமைப்பு: பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
1 min read
Constituency realignment: India Alliance MPs protest in Parliament complex
19.3.2025
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. பாராளுமன்றத்தில் தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிக்க தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசு வழங்கி இருந்தார். ஆனால் இது பற்றி விவாதிக்க சபாநாயகர் ஓம்பிர்லா அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது Fair Delimitation என்ற பெயர் தாங்கிய பெரிய துணியை எம்.பி.க்கள் பிடித்திருந்தனர்.
போராட்டத்தின்போது பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, “தொகுதி மறுசீரமைப்பு நடத்தப்பட்டால் நாடாளுமன்றத்தில் எங்களது குரலின் வலிமை குறைந்துவிடும்” என்று தெரிவித்தார்.
வரும் 22 ஆம் தேதி சென்னையில், தொகுதி மறுசீரமைப்புக்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.