ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து – தேர்வர்கள் தவிப்பு
1 min read
Railway Assistant Loco Pilot Exam Cancelled at Last Minute – Candidates in Distress
19.3.2025
நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அவதியடைந்தனர்.
தெற்கு ரெயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு இன்று ஷிஃப்ட் முறையில் நடைபெற இருந்தது.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக எந்த முன்னறிவிப்பும் இன்றி மையங்களில் திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது. வெளிமாநில தேர்வு மையங்களை மாற்றுமாறு வைத்த கோரிக்கையை நிராகரித்த ரெயில்வே வாரியம், இப்போது எவ்வித முன்னறிவிப்பின்றி தேர்வை ரத்து செய்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கானாவுக்கு தேர்வு எழுதச் சென்ற 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரக்தியடைந்தனர்.