பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை தாக்கிய மாணவர்கள்
1 min read
Students attack professor who sexually harassed them
சென்னை படூர் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சஞ்சுராஜ் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்பிக்கும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பேராசிரியை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சக பேராசிரியர்கள், பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சஞ்சுராஜுக்கு தர்மஅடி கொடுத்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தெரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் அந்த பேராசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்தனர். மேலும் பெண் பேராசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.