July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்க நாடாளுமன்றக்குழு பரிந்துரை

1 min read

Parliamentary committee recommends adding heatwave to disaster list

20.3.2025
மத்திய அரசு தனது பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற “புதிய மற்றும் வளர்ந்து வரும்” பேரிடர்களைச் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

முன்னதாக உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வாரம் மாநிலங்களவையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில் வெயில் தாக்கத்தை பேரிடர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்படி, ‘அரசின் புதிய மற்றும் அதிகரித்து வரும் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் வெப்ப அலையின் தாக்கம் உள்ளிட்டவற்றை சேர்க்க இந்த குழு பரிந்துரைக்கிறது. மேலும், பேரிடர் மேலாண்மை சட்டம் பொருத்தமானதாகவும், வளர்ந்து வரும் பேரிடர் அபாயங்களுக்கு ஏற்பவும் இருப்பதை உறுதிசெய்ய, வல்லுனர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடன் கலந்தாலோசித்து, பேரிடர் பட்டியலை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து புதுப்பிப்பதற்கான வழிமுறையையும் நிறுவ வேண்டும்’ என கூறப்பட்டு உள்ளது.
சேதங்களை குறைக்கவும், விரைவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளில் அதிக முதலீடு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

பா.ஜகவின் ராஜ்யசபா எம்.பி. ராதா மோகன் தாஸ் அகர்வால் தலைமையிலான 31 பேர் கொண்ட குழு, காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் பேரிடர் அதிர்வெண் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நீண்டகால பேரிடர் தயார்நிலை குறித்து ஆய்வு செய்து திட்டமிடுமாறு மத்திய அமைச்சகத்தை வலியுறுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.