July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

அதிக மதிப்பெண் தருவதாக கூறி மாணவிகளை கற்பழித்த பேராசிரியர்

1 min read

Professor raped female students on the pretext of giving them high marks

21.3.2025
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஹத்ராஸ் என்ற இடத்தில் சேத்பூல் சந்த் பாக்லா என்ற முதுகலை கல்லூரி உள்ளது.

இந்த கல்லூரியில் புவியியல் பேராசிரியராக ரஜ்னிஷ் குமார் (வயது 50). என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி அழகான மனைவி உள்ளார். ஆனால் குழந்தைகள் இல்லை.

பேராசிரியர் ரஜ்னிஷ்குமார் அடிக்கடி தனது செல்போன் மற்றும் தனது அறையில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் ஆபாச படங்களை பார்த்து வந்தார்.
கல்லூரி மாணவிகளை அவருடைய வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்ய முடிவு செய்தார். கடந்த 2009-ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் மிகவும் அக்கறையாக பேசுவது போல் நடந்து கொண்டார்.

அந்த மாணவிக்கு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாகவும், தனக்கு தெரிந்த தனியார் நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.

இதுபற்றி பேசுவதற்காக தனது அறைக்கு வரும்படி மாணவியை அழைத்துச் சென்றார். அங்கு வந்த மாணவியை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். அதனை தனது கம்ப்யூட்டரில் இருந்த ரகசிய கேமரா மூலம் பதிவு செய்தார்.

கண்ணீர் விட்டு கதறிய மாணவியிடம் இந்த சம்பவத்தை வெளியே கூறினால் ஆபாச படத்தை ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார்.

இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்லாமல் மூடி மறைத்து விட்டார்.
ஒரு மாணவியை சீரழித்த பேராசிரியரின் ஆசை நிற்கவில்லை. ஆண்டுதோறும் அவருடைய லீலைகள் தொடர்ந்தன. மேலும் பல மாணவிகளை அதிக மதிப்பெண் மற்றும் வேலைவாய்ப்பு தருவதாக ஆசை வார்த்தை கூறியும். மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என மிரட்டியும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கற்பழித்தார்.

அதனை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து தனது செல்போனில் பதிவேற்றம் செய்து கொண்டார்.

பல ஆண்டுகளாக பேராசிரியரின் அட்டூழியம் தொடர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை மிரட்டி தன்னுடைய அறைக்கு வரவழைத்தார்.
அப்போது மாணவியிடம் பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் அத்துமீற தொடங்கினார். பதறிப்போன மாணவி அவரிடம் இருந்து தப்பி வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து போலீசாருக்கு ரகசிய புகார் வந்தது. இதனை அறிந்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். புகார் கொடுக்கப்பட்ட 72 மணி நேரத்திற்குள் தலைமறைவாக இருந்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமாரை கைது செய்தனர்.

அவருடைய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் போலீசார் ஆய்வு செய்தபோது 65-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன. இதில் 59 கல்லூரி மாணவிகள் படங்கள் வீடியோக்கள் இருந்தன.

மற்ற ஆபாச வீடியோக்கள் அவர் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துள்ளார். அடிக்கடி செல்போனில் இருந்த ஆபாசங்களை பார்த்து ரசித்துள்ளார்.

இது குறித்து ரஜ்னிஷ் குமார் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தருவதாகவும், அதிக சம்பளத்தில் வேலை தருவதாக கூறி மாணவி களை அறைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தேன். மேலும் சில மாணவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளேன்.

கடந்த 2009-ம் ஆண்டு மாணவி ஒருவரை அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்தேன். அப்போது எங்களுக்கு தெரியாமலேயே அங்கிருந்த கம்ப்யூட்டர் வெப்கேமராவில் உல்லாசமாக இருந்த காட்சிகள் பதிவாகிவிட்டது.

அதனை பார்த்த பிறகுதான் எனக்கு மற்ற மாணவிகளை கற்பழித்து ஆபாச படம் எடுக்க வேண்டும் என்று எண்ணத்தை தூண்டியது.

இதனைத் தொடர்ந்து எனது கம்ப்யூட்டரில் பாலியல் பலாத்காரத்தை பதிவு செய்வதற்காக சிறப்பு கேமரா மென்பொருள் ஒன்றை நிறுவினேன். அதன் மூலம் மாணவிகளின் ஆபாச படங்களை பதிவு செய்தேன்.

இதுவரை எத்தனை மாணவிகளை கற்பழித்துள்ளேன் என்பது எனக்கே தெரியவில்லை. மாணவிகளை ஆபாச படங்களை காட்டி மிரட்டியை அடிபணிய வைத்து அமைதியாக இருக்கச் செய்தேன். இதனால் அவர்கள் புகார் கொடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கல்லூரி பேராசிரியர் மாணவிகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாணவிகளை கற்பழித்து வீடியோ எடுத்த பேராசிரியர் ரஜ்னிஷ் குமார் குறித்து போலீசாருக்கு கடிதம் மூலம் மாணவி ஒருவர் புகார் அளித்தார். அதில் பேராசிரியர் செல்போனில் உள்ள ஆபாச படங்கள் நிறைந்த பென்டிரைவ் ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது.

அதில் பேராசிரியர் அதிக மதிப்பெண்கள் மற்றும் வேலை வாங்கி தருவதாக கூறி மாணவிகளை பாலியல் செயல்களில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார்.

“நான் என் உண்மையான பெயரைப் வெளியிட விரும்பவில்லை. ஏனென்றால் இரக்கமற்ற பேராசிரியர் என்னைக் கொன்றுவிடுவார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையிலேயே போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனே பேராசிரியர் கல்லூரியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.