வீட்டில் எடுத்த பணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை- டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சொல்கிறார்
1 min read
I have nothing to do with the money found in the house – says Delhi High Court judge
23.3.2025
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் ய்ஷ்வந்த் வர்மா. இவர் டெல்லியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இதனிடையே, கடந்த 14ம் தேதி ஹோலி பண்டிகையின்போது யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. யஷ்வந்த் வர்மா வெளியூர் சென்ற நிலையில் அவரது குடும்பத்தினர் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைந்தனர். அப்போது, நீதிபதியின் வீட்டில் உள்ள அறைகளில் கட்டு கட்டாக பணம் இருப்பதை கண்டு தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தீ விபத்தில் பணம், ஆவணங்கள் தீயில் எரிந்தன.
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் இருந்தது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் யஷ்வந்த் வர்மா மற்றும் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உள்விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், நீதிபதி வர்மாவை அலகாபாத் கோட்டிற்கு பணியிடமாற்றம் செய்யவும் உத்தவிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து உள்விசாரணை தொடர்பாகவும், வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பாகவும் ய்ஷ்வந்த் சர்மாவுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசுக்கு நீதிபதி யஷ்வந்த் சர்மா பதில் அளித்துள்ளார்.
அதில், தனக்கு எதிராக சதி நடப்பதாகவும், வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் சிக்கவைக்க முயற்சி நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், யஷ்வந்த் வர்மா நேற்றுமுன்தினம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பணம் இருந்தது குறித்து எனக்கும், எனது குடும்பத்திற்கும் தெரியாது. பணத்திற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தீ விபத்து ஏற்பட்டபோது பணம் எதுவும் எங்கள் குடும்பத்தினரிடம் காண்பிக்கப்படவில்லை. பணியில் இருந்த ஊழியர்களிடமும் பணத்தை காட்டவில்லை.
பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் ஸ்டோர் ரூமில் நாங்கள் பழைய பொருட்களையே வைத்திருந்தோம். அந்த ரூம் திறந்து இருந்துள்ளது. அந்த ரூமுக்கு முன்வாசல் வழியாகவும், ஊழியர்கள் தங்கியுள்ள குடியிருப்பின் பின்வாசல் வழியாகவும் செல்லலாம். எங்கள் வீட்டிற்கும் அந்த ஸ்டோர் ரூமிற்கும் இடையே இடைவெளி உள்ளது. அந்த ஸ்டோர் ரூம் நான் தங்கியுள்ள வீட்டில் இல்லை’
இவ்வாறு அவர் கூறினார்.