June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் மரணம்

1 min read

Bharathiraja’s son Manoj dies of heart attack

25.3.2025
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாரதி ராஜா. இவரது இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து மனோஜ் “சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தையும் மனோஜ் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது..
இதற்கு முன்னர், உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். இவர், மலையாள நடிகையான நந்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சமீப நாட்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர் அவர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு உடல் நலன் தேறி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் மாரடைப்பால் இறந்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.