ஒரே நாடு ஒரே தேர்தல்: கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்புக்கு மக்களவை ஒப்புதல்
1 min read
One Nation, One Election: Lok Sabha approves extension of time for submission of joint committee report
25.3.2025
ஒரு நாடு, ஒரு தேர்தல் தொடர்பான பாராளுமன்ற கூட்டு குழுவின் (ஜேபிசி) பதவிக் காலத்தை 2025 மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி வாரத்தின் முதல் நாள் வரை நீட்டிக்கும் தீர்மானத்தை மக்களவை அங்கீகரித்துள்ளது.
கூட்டுக் குழுவின் தலைவர் பிபி சவுத்ரி, ஒரே நாடு, ஒரு தேர்தல் மசோதா (129 வது சட்டத்திருத்தம் 2024), யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா, 2024 ஆகிட்டவற்றின் மீதான அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது தொடர்பான தீர்மானத்தை இன்று மக்களவையில் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை மக்களவை அங்கீகரித்தது. இதற்கிடையே நேற்று மதியம் 3 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆராயும் கூட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு அக்குழுவின் அறிக்கையின் பேரில் மசோதாவானது கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மசோதாவை ஆராய பாஜக எம்பி பிபி சவுத்ரி தலைமையில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.