இந்திய பிரதமர் மோடி மிகவும் புத்திசாலியான மனிதர்-டிரம்ப் பாராட்டு
1 min read
Trump praises Indian Prime Minister Modi as a very intelligent man
29.3.2025
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பதவியேற்ற நாள் முதலே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அவரது வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக அரங்கில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், இந்தியா அதிக வரி விதிக்கிறது. எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன என தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய டிரம்ப், “இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். ஆனால், இந்தியாவுடன் எனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அவர்கள் உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக உள்ளனர். அவர்கள் அந்த வரிகளை கணிசமாகக் குறைப்பார்கள் என நான் நம்புகிறேன்.
ஏப்ரல் 2-ம் தேதி அவர்கள் எங்களிடம் வசூலிக்கும் அதே கட்டணங்களை நாமும் அவர்களிடம் வசூலிப்போம் என தெரிவித்தார்”
இந்நிலையில், ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் புத்திசாலியான மனிதர்’ என்று டிரம்ப் பாராட்டியுள்ளார்.
நியூ ஜெர்சிக்கான அமெரிக்க வழக்கறிஞர் அலினா ஹப்பாவின் பதவியேற்பு விழாவின் போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “பிரதமர் மோடி சமீபத்தில் தான் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருந்தோம். பிரதமர் நரேந்திர மோடி மிகவும் புத்திசாலியான மனிதர். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாங்கள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினோம். மேலும் இந்தியாவுக்கு ஒரு சிறந்த பிரதமர் இருக்கிறார் என்று நான் சொல்ல விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.