ஆலங்குளம் ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப் பணிகள்- கலெக்டர் ஆய்வு
1 min read
Development works in Alankulam union area – Collector inspects
5.4.2025
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம்
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்ததாவது;-
தமிழ்நாடு முதலமைச்சர் தென் மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களுக்குத் தேவையான வளர்ச்சித்திட்டங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்க அறிவுறுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளையும், வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், ஊத்துமலை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதி குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும். வடக்கு காவலாகுறிச்சி ஊராட்சி நவநீதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தின் அடிப்படை வசதிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.
முன்னதாக, தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் இராஜகோபாலப்பேரி கிராமம் அதிசயபுரத்தில் பட்டு வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் பட்டு வளர்ப்பு கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது. பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர்நிஷாந்தினி ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண ராமசுப்பிரமணியன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.