பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது
1 min read
Congress party members arrested for trying to show black flag to PM Modi
6.5.2025
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தாார். அதன்பின்னர் பிரதமர் ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார்.
இந்த நிலையில், ராமேஸ்வரத்திற்கு வர உள்ள பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். அப்போது கருப்பு கொடி காட்ட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்ய முயன்றபோது இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கருப்பு கொடிகளை கைப்பற்றி காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.