அமெரிக்காவுக்கு 10 சதவீதம் ஆடை ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு
1 min read
Garment exports to the US could increase by 10 percent
6.4.29025
அமெரிக்காவால் இந்தியாவுக்கு 27 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் ஆடைத்துறையில் கடும் போட்டியாளர்களாக உள்ள வியட்நாமுக்கு 46 சதவீதம், இலங்கைக்கு 44 சதவீதம், வங்கதேசத்துக்கு 37 சதவீதம் சீனாவுக்கு 34 சதவீதம் என்ற அளவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்திக்கான செலவு, போட்டி த்தன்மையை ஒப்பிட்டால் இது இந்தியாவுக்கு மிகத்தெளி வாக பெரும் நன்மையை தரும்.
கடந்த காலத்தில் பருத்தி ஆடை ஏற்றுமதிக்கு இந்தியாவை போலவே வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளும் அமெரிக்காவின் வரியை எதிர்க்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் சமீபத்திய மாற்றத்தின்படி பார்க்கும்போது, இந்தியாவுக்கான வரி குறைவதால், அமெரிக்க சந்தைக்கான ஆடை ஏற்றுமதியில் இந்தியா பல அடிகள் முன்னோக்கி செல்ல முடியும். தற்போதுள்ள வரி விதிப்பில் சில மாற்றங்கள் வரும். இல்லாவிடில் தற்போதுள்ள இந்திய ஜவுளி ஏற்றுமதி 10 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கலாம்.
தற்போது அமெரிக்க ஜவுளிச்சந்தையை சீனா 21 சதவீதம், வியட்நாம் 19 சதவீதம், வங்கதேசம் 10 சதவீதம் என்ற அளவில் ஆக்கிரமித்துள்ளன. இதில், இந்தியாவின் பங்களிப்பு வெறும் 6 சதவிகிதம்தான். தற்போதைய வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும். ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவை விட வரி குறைவு என்றாலும் அந்த நாடுகள் அமெரிக்க ஜவுளிச்சந்தையில் 3 சதவீதம் மட்டுமே பங்கெடுத்துள்ளன என்றார்.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு முறையால் கிடைக்கும் வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்துவதற்கு மத்திய அரசு சில உதவிகளை செய்ய வேண்டும் என ஜவுளித்துறையினர் கோருகின்றனர்.முக்கியமாக அமெரிக்காவில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் விதிக்கப்படும் 11 சதவீத வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் வலியுறுத்தி உள்ளனர். அப்படிச் செய்யும்பட்சத்தில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகளுக்கும் அந்நாட்டில் வரி விலக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.