காசாவில் உதவிக்குழு ஊழியர்கள் 15 பேரை படுகொலை செய்த இஸ்ரேல்
1 min read
Israel kills 15 aid workers in Gaza
6.4.2025
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மார்ச் 23 ஆம் தேதி காசாவில் உள்ள ராஃபா நகரத்தில் ஆம்புலன்களில் சென்றுகொண்டிருந்த உதவுக்குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதில் ரெட் கிரசண்ட் ஊழியர்கள் 8 பேர், பாதுகாப்பு அவசரப்பிரிவை சேர்ந்த 6 உறுப்பினர்கள் மற்றும் ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்கள் உதவிக்குழுவைச் சேர்த்தவர்கள் என்று தெரிந்தே இஸ்ரேல் வேண்டுமென்றே அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கள் வீரர்களை நெருங்கி வந்த வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இந்நிலையில் அன்றைய தினம் நடந்த தாக்குதல் தொடர்பான, உயிரிழந்த உதவிக்குழுவில் இருந்த பாலஸ்தீனிய ஊழியர் ஒருவரின் செல்போனில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் தற்போது வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஊழியர்கள் பயணம் செய்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களில் அவசரநிலையை உணர்த்தும் விளக்குகள் எரிந்த நிலையில் இருப்பதும், இஸ்ரேலிய ராணுவத்தினர் வாகனங்களை நோக்கியும் உதவிக்குழுவினரை நோக்கியும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பதிவாகி உள்ளது.
இதன்படி இஸ்ரேல் வேண்டும் என்றே உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்து வருகின்றன. இந்த காணொளி குறித்து இஸ்ரேல் இன்னும் எனது விளக்கமும் அளிக்கவில்லை.