மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,455 ஆக உயர்வு
1 min read
Myanmar earthquake: Death toll rises to 3,455
6/5/2025
மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதேபோல், மியான்மரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
மியான்மரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3,455 ஆக அதிகரித்துள்ளது. 4840 பேர் காயம் அடைந்துள்ளனர். 214 பேர் மாயமாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலநடுக்கத்திற்கு 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் 30 லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். 2 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.