வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
1 min read
President approves Waqf Board Amendment Bill
6.4.2025
வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு அறிமுகம் செய்தபோது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதனால் அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவில் அந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து அந்த பரிந்துரைகளுடன் வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் மீது நள்ளிரவு வரை விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. இதையடுத்து அந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதை பரிசீலித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நேற்று இரவு அனுமதி அளித்தார். இதன் மூலம் அந்த மசோதா சட்டமாகியது.