சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு
1 min read
Cooking gas cylinder price hiked by Rs.50
7.4.2025
வீட்டு உபயோகத்துக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
விலை உயர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் புரி வெளியிட்டு உள்ளார். எரிவாயுவை குறைந்த விலைக்கு விற்பதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.41.338 கோடி இழப்பு என்றும் அந்த இழப்பை ஈடுகட்டவே விலை உயர்வு என்றும் அவர் கூறி உள்ளார்.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் மற்றும் பயனாளிகள் அல்லாதவர்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என்றும் அமைச்சர் ஹர்திப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இந்த உயர்த்தப்பட்ட புதிய விலை நாளை (ஏப்.8) முதல் அமலாகிறது. புதிய விலை அறிவிப்பின் மூலம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்துக்கான ஒரு காஸ் சிலிண்டர் விலை ரூ.803 என்பதில் இருந்து ரூ. 853 ஆக அதிகரித்துள்ளது.