அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை Enforcement Directorate raids Minister K.N. Nehru’s house
1 min read
7/4/2025
அமைச்சர் நேருவின் சகோதரரின் வங்கிக் கணக்கில் அதிக பரிவர்த்தனை அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் கே. என். நேருவின் மகனும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் கே. என். நேருவின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
கேரளம் மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் நேருவின் சகோதர்கள், சகோதரி, மகன் வீடுகளிலும் சோதனை நடைபெற்றும் வரும் நிலையில் அமைச்சர் நேரு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.