கிறிஸ்தவ மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ வழக்கு
1 min read
POCSO case against religious preacher John Jebaraj
7/4/2025
கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கிறிஸ்தவ சபையை சேர்ந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் புகார் தொடுக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் கேவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது. அதாவது கோவை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்த விழாவின் போது, தனது மாமனாரால் தத்து எடுக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் அண்டை வீட்டுக்காரரான 14 வயது சிறுமிக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து உள்ளது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.