பீகார் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பு
1 min read
Rahul Gandhi participates in Bihar rally
7.4.2025
பீகாரில் இந்த ஆண்டு கடைசியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று பீகாரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பாதயாத்திரையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளை டி-ஷர்ட் அணிந்து கொண்டு கலந்து கொண்டார்.
பெகுசராய் நகரின் மத்திய பகுதியிலிருந்து ராகுல்காந்தி தலைமையில் தொடங்கிய இந்தபேரணியில் கன்னையா குமார், மாநில தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பீகார் இளைஞர்களுக்கு தங்கள் சொந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் எனக்கோரி பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குக, புலம்பெயர்வதை தடுத்து நிறுத்துக என்கிற தலைப்பில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடந்தது. உடனடியாக பாதுகாப்புப் படைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தும் பதாகைகளை இந்தப் பேரணியில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் கையில் வைத்திருந்தனர். முழக்கங்களையும் எழுப்பினர். இதைத்தொடர்ந்து பாட்னாவில் நடக்கும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் ராகுல் காந்தி உரையாற்றினார்.