சிவாஜி இல்ல வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Shivaji House case: Court orders Ramkumar to file affidavit
7.4.2025
சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராம்குமாரின் மகன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணைக்கு போது, “சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை” என பிரபு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, “ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த பிரபு தரப்பினர்,”நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது” என குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, ” தனக்கும் அன்னை இல்லத்திற்கும் தொடர்பு இல்லை” என ராம்குமார் தரப்பு கூறியது.
சிவாஜி வீட்டின் மீது தனக்கு எந்த உரிமையும் இல்லை எனவும், எதிர்காலத்திலும் உரிமை கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.