July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இளம்பெண்களுக்கு அதிர்ச்சி தகவல்

1 min read

Shocking information for young girls who use smartphones

6.4.2025
செல்போன்கள் தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் செல்போன்களில் திரையை தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.
ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்கள் என எப்போது பார்த்தாலும் அதிக அளவில் இளைஞர்கள் இதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

இதில் யாருக்கு அதிக அளவில் ஆபத்து மற்றும் மன அளவில் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வந்தனர் .

இந்த ஆய்வின் முடிவில் ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.

அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள கூடும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் போன் பயன்படுத்துவதால் சமூகப் பதட்டத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு இந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணங்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சிக்கலான ஸ்மார்ட்போன் பயன்பாடு இளைய தலைமுறையினர் இடையே உள்ள பிரச்சனையை தீர்ப்பதற்கும் அதன் காரணம் மற்றும் விளவுகளை கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.