தென்காசி கோவில் கும்பாபிஷேகம்- லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
1 min read
Tenkasi Temple Kumbabhishekam – Lakhs of devotees attend
7.4.2025
தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
தென்காசியில் பழமையும், பெருமையும் வாய்ந்த கோவிலாக உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 578 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். கடந்த 15.11.1446ம் தேதி அப்போது தென்காசியை ஆண்டு வந்த பராக்கிரம பாண்டிய மன்னரால் திருக்கோவிலுக்கு கால்கோள் விழா நடைபெற்றது. 10.06.1447ம் தேதி மூலவரான காசிவிசுவநாதர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருப்பணிகள் நிறைவு பெற்று ராஜகோபுரம் தவிர மற்ற விமானக் கும்பாபிஷேகம் 1454ம் ஆண்டு நடைபெற்றது. ஒன்பது நிலை ராஜகோபுரத்திற்கு 3.11.1457ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பராக்கிரம பாண்டிய மன்னர் 1463ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். அவரது இளைய சகோதரர் ஜடிலவர்ம பாண்டிய மன்னரால் ஒன்பது நிலைகளை கொண்ட ராஜகோபுர பணி 1472ம் ஆண்டு நிறைவு பெற்றது.
1524ம் ஆண்டு சேர மன்னன் உதய மாத்தாண்ட வர்மன் கும்பாபிஷேகம் நடத்தினார். பின்னர் 1848ம் ஆண்டு ராஜகோபுரம் நீங்கலாக மற்ற விமானங்கள், மூலவருக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் 21.04.1945ம் தேதி அன்று திருக்கழுக்குன்றம் சந்திரகேரக் குருக்களால் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1967ம் ஆண்டு பி.டி.ராசன் தலைமையில் ராஜகோபுரம் தவிர மற்ற கோவில் விமான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
9.2.1982 அன்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் 9நிலை ராஜகோபுர கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ராஜகோபுர கட்டுமானப் பணிகள் 9 ஆண்டுகள் நடைபெற்றன.
பின்னர் 25.6.1990 அன்று டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் திருப்புகலூர் வைத்தியநாத சிவாசாரியார் சர்வ சாதகத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின் 16 ஆண்டுகள் கழித்து17.3.2006 அன்று டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் தலைமையில் குட முழுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது
இதன் பின்னர் 19 ஆண்டுகள் கழித்து இன்று (ஏப்.7ம் தேதி) மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 3ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. அன்று காலை 5 மணிக்கு ராஜ அனுக்ஞை, (பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபடுதல்), விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், பஞ்சகவ்யம், பாத்ர பூஜை, தனபூஜை, விப்ரானுக்ஞை, கிராம தேவ தானுக்ஞை, தேவதானுக்ஞை, ஸ்ரீமகா கணபதி ஹோமம்;, ஸ்ரீநவக்கிரக ஹோமம், ஸ்ரீமகாலட்சுமி ஹோமம், திரவ்யாகுதி, காலை 8.30 மணிக்கு பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோ பூஜை, அங்வ பூஜை, பூர்ணாகுதி. தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடைபெறகிறது. முhலையில் தீpர்த்த ஸங்கிரஹணம், கிராம சாந்தி, ரக்ஷோக்ன ஹோமம், தீபாராதனை. புpரசாதம் வழங்கல் நடைபெற்றது.
4ந் தேதி காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், ஸம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், ஆச்சார்ய தரவித ஸ்நானம் அக்னிசங்தரஹனம், யாகசாலை ஸ்தண்டிலம் அதை;தல். வுpநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மாலையில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், அங்குரார்பணம், ஆச்சார்ய ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாத்ராதானம், கடம் யாகசாலை பிரவேசம், முதற்கால யாக சாலை பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம்வழங்கல் நடைபெற்றது.
5ம்தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, விசேச சந்தி, பூதசுத்தி, பாவனாபிஷேகம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, திரப்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் விங்குதல், மாலையில் விக்னேஸ்வர பூஜை, விசேச சந்தி, பூத சுத்தி, பாவனாபிஸேகம், மூன்றாம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி. பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடைபெற்pறது.
நேற்று (6ம் தேதி) காலை விக்னேஸ்வர பூஜை, விசேச சந்தி, பூதசுத்தி, பாவனாபிஷேகம். நான்காம் கால யாகசாலை பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, திரவ்யாகுதி, பூர்ணாகுதி,, தீபாராதனை, பிரசாதம் வழங்கல், மாலையில் விக்னேஸ்வரபூஜை, விசேச சந்தி, பூதசுத்தி, பாவனாபிஷேகம், ஐந்தாம் கால யாகசாலை பூஜை, திரவ்யாகுதி, வஸ்த்ராகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை. லட்சுமி பூஜை, பிம்பசுத்தி, மூர்த்தி ரக்ஷாபந்தனம், பிரசாதம் வழங்கல் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நாளான இன்று (7ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை, பரிவார யாகசாலை பூர்ணாகுதி, 6 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிசேனம். நாடி சந்தானம், ஸ்பர்ஸாகுதி, திரவ்யாகுதி நடைபெற்றது. பின்னர் 7 மணிக்கு மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் எழுந்தருளல், 9 மணிக்கு மேல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பச்சை கொடியை அசைக்க அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை ஸ்ரீகாசிவிசுவநாதசுவாமி திருக்கோவில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூல ஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தினர்.
பின்னர் மகாபிஷேகம், தீபாராதனை. பிரசாதம் வழங்கல் நடைபெற்றது. ஆலாலயசுந்தர வேதசிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாணசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்தனர். இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறுகிறது.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் ஈ.ராஜா, மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.