டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றச் சொல்வது ஏன்? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
1 min read
Why is the TASMAC case being transferred to another state? – Edappadi Palaniswami questions
7.4.2025
சட்டசபையில் இன்று டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமி பேசுவது அவைக்குறிப்பில் பதிவேற்ற முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.இதனால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, வேறு எதைத்தான் பதிவு செய்வீர்கள் என கேள்வியெழுப்பியதுடன், எதையுமே பேச விடுவதில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையை விட்டு வெளியேறினர்.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
“டாஸ்மாக் விவகாரம் குறித்து பேச அனுமதி கேட்டோம். டாஸ்மாக் அரசு சார்ந்த நிறுவனம் என்பதால்தான் கேள்வி கேட்கிறோம். டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று அரசு சொல்வது ஏன்? டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தபோது, நாங்கள் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டுமென்று கேட்டோமா?
கச்சத்தீவு யார் ஆட்சியில் தாரைவார்க்கப்பட்டது. கச்சத்தீவு திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்டது. அதை முதல்-அமைச்சர் மறைக்கப் பார்க்கிறார். நீட் தேர்வை கொண்டு வந்ததும் திமுக-காங். ஆட்சிதான்.”
இவ்வாறு அவர் பேசினார்.