July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் அழைத்து சென்றது அமலாக்கத்துறை

1 min read

Minister K.N. Nehru’s brother was taken away by the Enforcement Directorate

8/4/2025
அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அழைத்து சென்றனர்.
தி.மு.க., அமைச்சரவையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக நேரு இருந்து வருகிறார். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் கே.என். நேரு, அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் மகன் வீடு, அலுவலகம் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

நேருவின் சகோதரர்கள் மற்றும் அவரது மகன் பங்குதாரர்களாக உள்ள டி.வி.எச்., குழுமம், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியிலும் நேருவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளாக, கே.என்.நேருவின் மகன் அருண், சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர்.
இவர்களது நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணம் வரவு செலவு தொடர்பான விவகாரங்களில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அழைத்து சென்றுள்ளனர்.

தங்களிடம் உள்ள ஆவணங்கள், விசாரணையில் கண்டறியப்பட்ட தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.