பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்
1 min read
Central government approves purchase of 26 Rafale fighter jets from France
9/4/2025
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பில், 26 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக இருநாட்டு அரசுக்களுக்கு இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி ஒற்றை இருக்கை கொண்ட 22 ரபேல் போர் விமானங்கள், இரட்டை இருக்கைகள் கொண்ட 4 ரபேல் போர் விமானங்கள் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்களை இந்திய கடற்படைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் திருப்பதி- காட்பாடி இடையே ரெயில் பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 104 கி.மீ. தூரம் கொண்ட வழித்தடம் 1,332 கோடி ரூபாய் செலவில் இரட்டை பாதையாக மாற்றப்படுகிறது.
இத்திட்டம் மூலம் சுமார் 14 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் காளகஸ்தி கோவிலுக்கான இணைப்பு மேம்படும். ஆண்டுக்கு 4 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்து நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை மந்திரி செபாஸ்டியன் லெகார்னு இந்தியாவிற்கு வர உள்ள நிலையில், அப்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.