வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்
1 min read
A 3-judge bench will hear the petition against the Waqf Amendment Act in the Supreme Court.
10.4.1‘2025
வக்பு திருத்த சட்ட மசோதா பாராளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்களுக்குப் பிறகு நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கிடையே காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 10-க்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை வருகிற 16ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சய் கன்னா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த மனுக்களை விசாரிக்க இருக்கிறது.
தலைமை நீதிபதியுடன் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநான் ஆகியோர் இந்த பெஞ்சில் இடம் பிடித்துள்ளனர். வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.