தி.மு.க.வை வேரோடு அகற்றுவது முக்கியம்- அ.தி.மு.க. கூட்டணி குறித்து பிரதமர் மோடி
1 min read
It is important to uproot DMK – AIADMK. Prime Minister Modi on the alliance
12.4.2025
தமிழகத்தில் வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் என்.டி.ஏ. கூட்டணி அமைத்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக வலிமையாக ஒன்றுபடுவோம். தே.ஜ.கூட்டணியில் அ.தி.மு.க. இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
தே.ஜ.கூட்டணி கட்சிகள் இணைந்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். மாநிலத்திற்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வோம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசை நாங்கள் உறுதி செய்வோம்.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாசாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், ஊழல் தி.மு.க.வை விரைவில் வேரோடு அகற்றுவது முக்கியம். அதை தே.ஜ.கூட்டணி உறுதி செய்யும்.
இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.