மசோதாவுக்கு ஒப்புதல் விவகாரத்தில் ஜனாதிபதிக்கு முதல்முறையாக சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு
1 min read
Supreme Court issues first deadline to President on bill approval issue
12.4.2025
தமிழக கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு முதன்முறையாக காலக்கெடு விதித்துள்ளது. மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கு உத்தரவிடக் கோரும் தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த 8-ஆம் தேதி தீர்ப்பு கூறியது.
அத்தீர்ப்பின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது அதில், கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.