இந்த ஆண்டு எப்படி இருக்கும்-பஞ்சாங்கம் கணிப்பு
1 min read
What will this year be like-Panchangam prediction
14.4.2025
இந்த விசுவாவசு ஆண்டு எப்படி இருக்கும் என்பதை பஞ்சாங்கங்கள் கணித்துள்ளன. அதன் முக்கிய அம்சங்களை தொகுத்து வழங்குகிறோம்.
ஒரே சீரான கல்வி
லக்கினத்திற்கு சஷ்டம பாக்கியாதிபதியான புதன் பகவான் இந்த ஆண்டு நீரஸாதிபதியாக வருவதால் கல்வித்துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். மாணவ& மாணவிகளுக்கு ஒரே சீரான கல்வி வழங்கப்படும். தொழிற்கல்வியின் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளுக்கு எளிய முறையில் கல்வி கற்பிக்கப்படும். இந்த ஆண்டு வேலை வாய்ப்புகள் அதிகமாக உண்டாகி வேலை இல்லா திண்டாட்டம் சற்று குறையும் என்று ஆற்காடு பஞ்சாங்கம் கிடைத்துள்ளது.
மேலும் கூறும்போது, இந்த ஆண்டு மாணவ மாணவிகளுக்கு தேவையான ஒரே சீரான கல்வி வழங்கப்படும். மத்திய மாநில அரசுகளின் மூலம் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அந்த பஞ்சாங்கம் கூறியுள்ளது.
செல்போன் விலை உயரும்
இந்த ஆண்டு லக்னத்திற்கு ஒன்றுக்கும் இரண்டுக்கும் உடைய சனி பகவான், லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் நல்ல மழையும் உணவுப் பொருட்கள் அமோகமாக விளைச்சலும் இருக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் விலை உயரும். செல்போன், டிவி போன்றவை விலை உயரும். புதுப்புது ஏவுகணைகள் கண்டுபிடிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்படும். மத்திய அரசின் நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். இதனை ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது
தங்கம் வெள்ளி விலை உயரும்
லக்கினத்திற்கு திருதிய விரையாதிபதியான குருபகவான் லக்னத்திற்கு ஐந்தில் அமர்ந்திருப்பதால் இந்த ஆண்டு சஸ்யாதிபதியாகவும் வருவதால் தங்கம் வெள்ளி வைரம் மாணிக்கம் கோமேதகம் ஆகியவற்றின் விலை உயரும். அந்நிய செலாவணி கையிருப்பு அதிகமாக இருக்கும். புளி, வெல்லம், சர்க்கரை, மதுபானங்கள், வாசனை திரவியங்கள், ஏலக்காய் லவங்கம், சாம்பிராணி கற்பூரம் விலை உயரும் என்று ஆற்காடு பஞ்சாங்கம் கணித்துள்ளது.
பெண்கள் முன்னேற்றம்
இந்த ஆண்டு முக்கிய பதவி வகிப்பவர்களுக்கு உடல் நலப்பாதிப்பும் மனச்சோறும் ஏற்படும். பெண்களுக்கு எல்லா துறைகளிலும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த தகவலை ஆற்காடு பஞ்சாங்கம் தெரிவித்துள்ளது
இந்த ஆண்டிற்கான சித்தர் பாடல்
தமிழ் வருடங்கள் பிரபவ முதல் அட்சய வரை மொத்தம் அறுபது ஆண்டுகள் உண்டு. இப்போது பிறக்கபோகும் விசுவாவசு 39&வது ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என்று இடைக்காடர் சித்தர் கணித்து கவிதையாக படைத்து வைத்துள்ளார். அந்த வகையில் இந்த குரோதி ஆண்டுக்கான பாடல் வருமாறு:&
விசுவாவசு வருடம் வெள்ளாண்மை யேறும்
பசு ஆடு மாடு பலிக்கும்& சிசுநாசம்
மற்றையரோ வாழ்வார்கள் மாதவங்கண் மீறுமே
உற்றுலகி னல்ல மழை யுண்டு
&இதன் பொருள்
விசுவாவசு ஆண்டில் வேளாண்மை செழிக்கும். மேலும் மேலும் வளரும். பசுக்களும், காளையும், ஆடுகளும் விருத்தி அடையும். கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் சுகவீனம் ஏற்படும். நாட்டு மக்கள் நல்லபடி வாழ்வார்கள். தர்ம காரியங்கள், தவங்கள் சிறப்பாக நடக்கும். நல்ல மழை பெய்துநாடு செழிக்கும்.
மலம் மாதம் இல்லை
தமிழ் மாதம் பன்னிரெண்டில் ஏதாவது ஒரு மாதம் இரண்டு அமாவாசயையோ, இரண்டு பவுர்ணமியோ வந்தால் அது மலம் மாதம் என்று அர்த்தம். அந்த மாதத்தில் சிலர் திருமணம் பேன்ற சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பர். இந்த ஆண்டு அப்படியொரு நிலை இல்லை. ஆம் இந்த ஆண்டு மலமாதம் இல்லை. எனவே சுபகாரியங்களுக்கு தடை இல்லை.
ஆடி 5&ந் தேதி பலன்
ஆடி 5&ந் தேதி திங்கட்கிழமை, சனி, ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் அந்த ஆண்டு பயிர்களை பூச்சிகள் தாக்கும். செவ்வாய்க்கிழமையாக இருந்தால் கதிர் சாவியாகும். புதன் கிழமையாக இருந்தால் ஒரு போகம் விளையும். வியாழக்கிழமையாக இருந்தால் இருபோகம் விளையும்.