கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் செயலாற்ற வேண்டும்- அ.தி.மு.க.வுக்கு முதலமைச்சர் அழைப்பு
1 min read
Chief Minister calls on AIADMK to overcome party differences and work together
15.4.2025
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க மாநில சுயாட்சி தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது கருத்து சொல்லாமல் சென்றது வருத்தம்.
அ.தி.மு.க.வை தோற்றுவித்த எம்.ஜி.ஆர், அவ்வியக்கத்தை வழிநடத்திய ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி என்னதான் தி.மு.க.விற்கும், அவர்களுக்கும் மாற்று கருத்து, மாறுபாடு, வேறுபாடுகள் இருந்தாலும், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டு தரமுடியாது என்கிற நிலைமையில் இருந்து பல கோரிக்கைகளை ஆதரித்து இருக்கிறார்கள்.
ஆனால் இன்றைக்கு என்ன சூழ்நிலை என்று புரியலை. ஆனா அது நமக்கு புரியும். பேசும்போது சொல்வார்கள் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று சொல்வார்கள். அதைத்தான் சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.
இதுதான் கொள்கையா? அந்த கேள்வியைத்தான் கேட்க வேண்டி இருக்கிறது.
எனவே தமிழ்நாட்டினுடைய நன்மையை கருதி, அதன் உரிமையை கருதி, நமக்கு இருக்கக்கூடிய சுயாட்சியை கருதி நான் அவர்களுக்கு வைக்கக்கூடிய கோரிக்கை, தமிழ்நாட்டு உரிமைகள் என்று வருகிறதோ அந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் அந்த பணியை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அனைவருக்கும் நன்றி கூறி அமர்கிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.