டாக்டர் ராமதாஸ்- அன்புமணி சலசலப்பு சரியாகிவிட்டது: ஜி.கே. மணி பேட்டி
1 min read
Dr. Ramadoss-Anbumani row has settled down: G.K. Mani interview
15.4.2025
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்து வருகிறார். கௌரவ தலைவராக ஜி.கே. மணி இருந்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கட்சி நிறுவனர் ஆவார்.
கட்சியில் உறவினருக்கு பதவி வழங்கியது தொடர்பாக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மேடையிலேயே, கட்சியில் இருந்தால் இரு… இல்லையென்றால் வெளியேறு… என டாக்டர் ராமதாஸ் கோபமாக தெரிவித்தார்.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்குவதாக தெரிவித்தார். இதனால் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே கட்சிக் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி கூறுகையில் “மாமல்லபுரத்தில் மே 11ஆம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருமே கலந்து கொள்வார்கள். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம்” எனத் தெரிவித்தார்.