July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலத்தில் ரூ.43.50 லட்சத்தில் புதிய கட்டிடம்; முதல்வர் திறந்து வைத்தார்

1 min read

New building in Courtallam costing Rs. 43.50 lakhs; CM inaugurates it

15/4/2025
தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டம் குற்றாலம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் ரூ.43.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் அறை கட்டிடம் மற்றும் தென்காசி மாவட்டம் அழகாபுரியில் ரூ.61.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினையும் சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டம் குற்றாலம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் கட்டப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் அறை கட்டிடம் மற்றும் தென்காசி மாவட்டம் அழகாபுரியில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தினையும் சென்னை கலைவாணர் அரங்கில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, நேற்று குற்றாலம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் கட்டப்பட்டுள்ள கற்றல் கற்பித்தல் அறை கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீகுமார் அவர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்கள்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்,
தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மாணவியர் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்றைய தென்காசி மாவட்டம் குற்றாலம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதியில் கற்றல் கற்பித்தல் அறை கட்டிடம் ரூ.43.50 இலட்சம் மதிப்பீட்டில் தாட்கோ துறை மூலம் கட்டி முடிக்கப்பட்டு மாணவியர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதல் தளம் 104.30 சதுர மீட்டர் பரப்பளவில் விளையாட்டு அறை, நூலக அறை, கணினி அறை. கணினி மேசை இருக்கைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆதிதிராவிடர் மக்கள் பயன்பெறும் வகையில் தென்காசி மாவட்டம் அழகாபுரியில் கட்டப்பட்டுள்ள சமுதாயநலக்கூடம் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 245.64 சதுர மீட்டர் (தரைத்தளம் 186.23 சதுர மீட்டர், முதல் தளம் 59.41 சதுர மீட்டர் ) பரப்பளவில் ரூ.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சமுதாயக்கூட கட்டிடத்தின் தரைத்தளத்தில் வரவேற்பறை, திருமணக்கூடம், திருமண மேடை, மணமகன் அறை, மணமகள் அறையுடன் குளியலறை, கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. முதல் தளத்தில் உணவுக்கூடம். சமையல் தயாரிக்க சுகாதாரமான வகையில் சமையல் அறையும். பொருள் வைப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அழகாபுரியில் உள்ள ஆதிதிராவிடர் மக்கள் தங்கள் குடும்பங்களில் நடைபெறும் திருமணம், சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுபகாரிய நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது 61001 மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மேலாளர் (தாட்கோ) த.ராஜ்குமார், மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.அன்னம்மாள் மற்றும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.