தோரணமலை தமிழ்புத்தாண்டு விழாவில் ராணுவ வீரர்களுக்கு மரியாதை
1 min read
Tribute to soldiers at the Thoranamalai Tamil New Year festival
15.4.2025
தோரணமலை முருகன் கோவிலில் தமிழ்புத்தாண்டு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதோரணமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலையில் சிறப்பு வருண கலச பூஜைக்காக மலை மீது இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அடிவாரத்தில் உள்ள கலையரங்கத்தில் வைத்து உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிவ பூத கனநாதர் வாத்திய குழுவினர் சிவ வாத்திய முழங்க உற்சவமூர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. விவசாயக் கருவிகளுக்கு பூஜை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
பின்னர் முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதினை விவசாயிகள் கையால் வழங்கப்பட்டது.
முன்னதாக பக்தர்களால் 51 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டு சர்க்கரை பொங்கல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
லோட்டஸ் பள்ளி மாணவர்கள் மற்றும் முத்துமாலைபுரம் ஆதிநாராயணன்-சந்திரலீலா மாலை நேர படிப்பக மாணவர் மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தோரணமலை பக்தர்களால் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது
மாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை நடைபெற்றது. காலை மதியம் அன்னதானம் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் ஆதிநாராயணன் செய்திருந்தார்