சீன பொருட்களை விரும்பி வாங்கும் 62 சதவீதம் இந்தியர்கள்
1 min read
62 percent of Indians prefer to buy Chinese products
16.4.2025
கடந்த 12 மாதங்களில் 62 சதவீதம் இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்கியுள்ளனர் என புதிய சர்வேயில் தெரியவந்துள்ளது.
லோக்கல் சர்க்கிள்ஸ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் சீனப் பொருட்களை வாங்கும் இந்திய நுகர்வோரின் சதவீதம் 55 சதவீத்தில் இருந்து 62 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியர்கள் அதிக சீனப் பொருட்களை வாங்கும் பிரிவுகள், கேஜெட்டுகள், மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல் பாகங்கள் ஆகும்.
மேலும் கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் 10 பேரில் இருவர் தங்கள் தொலைப்பேசிகளில் சீன செயலிகளை கொண்டுள்ளனர்.